கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வாலிபரை தாக்கிய காவலருக்கு அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு

Added : டிச 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:வாகன சோதனையின்போது, டூ - வீலரில் அமர்ந்தபடி பதில் அளித்த நபரை, அடித்து உதைத்த, தலைமை காவலருக்கு, மனித உரிமை ஆணையம், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.மாநில மனித உரிமை ஆணையத்தில், சென்னையை சேர்ந்த சரன் ஸ்ரீனிவாசன், தாக்கல் செய்த மனு:கடந்த, 2016 நவ., 13 இரவு, என் பாட்டி வீட்டிற்கு சென்றேன். அவர்கள் கேட்டதால், பால் பாக்கெட் வாங்கச் சென்று, கிடைக்காமல், டூ - வீலரில்

சென்னை:வாகன சோதனையின்போது, டூ - வீலரில் அமர்ந்தபடி பதில் அளித்த நபரை, அடித்து உதைத்த, தலைமை காவலருக்கு, மனித உரிமை ஆணையம், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

மாநில மனித உரிமை ஆணையத்தில், சென்னையை சேர்ந்த சரன் ஸ்ரீனிவாசன், தாக்கல் செய்த மனு:

கடந்த, 2016 நவ., 13 இரவு, என் பாட்டி வீட்டிற்கு சென்றேன். அவர்கள் கேட்டதால், பால் பாக்கெட் வாங்கச் சென்று, கிடைக்காமல், டூ - வீலரில் திரும்பினேன்.மாதவரம், பிரகாஷ் நகர், பொண்ணியம்மன் மேடு பகுதியில் சென்றபோது, மாதவரம் போலீசார் என்னை மடக்கி, வாகனத்தின் ஆவணங்களை கேட்டனர். வாகனத்தில் அமர்ந்து கொண்டே ஆவணங்களை அளித்தேன். உடனே, தலைமை காவலர் தவசி ஆனந்தன், என்னை அடித்து, கீழே தள்ளினார். 'வாகனத்தில் அமர்ந்து தான் பதில் சொல்வாயா...' என்றார்.

பின், காவல் நிலையம் அழைத்து சென்று, அடித்து துன்புறுத்தினார். அதிகாலை வரை என்னை அடித்து துன்புறுத்திய போலீசார், காலையில், பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.அப்போது, இந்த சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என, மிரட்டி அனுப்பினர். படுகாயமடைந்த நான், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். எனவே, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீசார் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் பிறப்பித்த உத்தரவு: வழக்கு விசாரணையில், தலைமை காவலர் தவசி ஆனந்தன், மனித உரிமை மீறலில் ஈடுபட்டு இருப்பது தெரிய வருகிறது. எனவே, பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு, 1 லட்சம் ரூபாய் அரசு வழங்க வேண்டும். அந்த தொகையை, தலைமை காவலரிடம் வசூலித்து கொள்ளலாம்.மேலும், இரவு பணிகளில் ஈடுபடும் காவலர்கள், இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால், உரிய விசாரணை நடத்தி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-டிச-202002:11:38 IST Report Abuse
தமிழவேல் தாக்கப்பட்டவரைவிட்டு அந்த போலீசுக்கு நடுரோட்டில் வைத்து 10 உதை தரவேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X