சென்னை : சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில், 'கில்லி சாய்' என்ற பெயரில், டீ விற்பனை நிலையமும், ஆட்டோவில் டீ விற்பனை கடையும் துவங்கப்பட்டது.
நாட்டிலேயே முதல் முறையாக, சென்னை, புதுச்சேரி, துபாய் உட்பட, 24 கிளைகளுடன், 'கில்லி சாய்' என்ற பெயரில், ஆட்டோவில் டீ விற்பனை செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம், தமிழகம் முழுதும் கிளைகளை துவங்க திட்டமிட்டுள்ளது.இதனையொட்டி, சென்னை, சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில், அமைச்சர்கள் ஜெயகுமார், எம்.சி.சம்பத் ஆகியோர், 'கில்லி சாய்' நிறுவனத்தின் டீ நிலையத்தையும், நடமாடும் ஆட்டோ டீ கடையையும் நேற்று துவக்கி வைத்தனர்.
கில்லி சாயின் இந்த முயற்சிக்கு, அரசின் மாசில்லா தமிழகம் திட்டமும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு, அரசின் வரிச்சலுகையும் உதவியாக இருந்துள்ளது.ஓராண்டில், 100 ஆட்டோக்களை பயன்படுத்தி, டீ விற்பனை செய்வதற்கும், பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கவும், இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்துடன், முன்னேற துடிப்பவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து, வேலை வாய்ப்பும் வழங்க உள்ளது.மெட்ரோ ரயில் நிலைய வளாகங்களில் அமைந்துள்ள, 'கில்லி சாய்' கிளைகளில் தயாரிக்கப்படும் டீ, எலக்ட்ரிக் ஆட்டோக்களில், பஸ் நிலையம், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களில் விற்பன செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE