பொது செய்தி

இந்தியா

பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு: பதிவு செய்யாமலே உரிமை கேட்கும் பாக்.,

Updated : டிச 29, 2020 | Added : டிச 29, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: புவிசார் குறியீடு பதிவு செய்யாமலேயே, பாசுமதி அரிசிக்கு, பாகிஸ்தான் உரிமை கோரியுள்ளது. பிரியாணி போன்ற உணவுப் பொருட்களை தயாரிக்க, பாசுமதி ரக அரிசி பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச சந்தையில், ஒரு குறிப்பிட்ட பொருளை விற்பதற்கு, அந்தந்த நாடு, புவிசார் குறியீட்டை பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், பாசுமதி அரிசிக்கு அங்கீகாரம் கேட்டு, ஐரோப்பிய யூனியனில்,
 பாசுமதி அரிசி, புவிசார் குறியீடு:  பதிவு செய்  உரிமை கேட்கும் பாக்.,

இஸ்லாமாபாத்: புவிசார் குறியீடு பதிவு செய்யாமலேயே, பாசுமதி அரிசிக்கு, பாகிஸ்தான் உரிமை கோரியுள்ளது.

பிரியாணி போன்ற உணவுப் பொருட்களை தயாரிக்க, பாசுமதி ரக அரிசி பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச சந்தையில், ஒரு குறிப்பிட்ட பொருளை விற்பதற்கு, அந்தந்த நாடு, புவிசார் குறியீட்டை பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், பாசுமதி அரிசிக்கு அங்கீகாரம் கேட்டு, ஐரோப்பிய யூனியனில், இந்தியா விண்ணப்பித்துள்ளது.இதை எதிர்த்து, 'எங்களுக்கு அந்த அங்கீகாரத்தை வழங்க வேண்டும்' என, ஐரோப்பிய யூனியனில், பாகிஸ்தான் முறையீடு செய்துள்ளது.


latest tamil news




இது குறித்து, பாகிஸ்தான் ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தான் ஆண்டுக்கு, ஏழு லட்சம் டன் வரை, பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்கிறது. அதில், 2.50 லட்சம் டன் வரை, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

புவிசார் குறியீடு பதிவு தொடர்பாக, இந்தாண்டு மார்ச்சில், புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், பாசுமதி அரிசிக்கு, புவிசார் குறியீடுக்கு அதில் பதிவு செய்யப்படவில்லை.
குறிப்பிட்ட நாட்டில் புவிசார் குறியீடு பதிவு செய்யப்படாத நிலையில், சர்வதேச சந்தையில், அதற்கு உரிமை கோர முடியாது. இதனால், பாகிஸ்தானைச் சேர்ந்த, பாசுமதி அரிசி ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
30-டிச-202014:56:24 IST Report Abuse
Vivekanandan Mahalingam மோடி அரசு எதையும் விட்டு கொடுக்காது . ஆண்மையுள்ள அரசு மோடி அரசு
Rate this:
Cancel
தமிழன் - தமிழகம்,இந்தியா
30-டிச-202013:32:02 IST Report Abuse
தமிழன் பஞ்சாப் விவசாயமே அழிஞ்சுருமே.. பின்னே இந்தியா எதற்கு உரிமை கோரனும் ... விட்டுகுடுத்திடலாம்.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
30-டிச-202012:30:53 IST Report Abuse
Anand இதை தான் மூர்க்கங்களுக்கு அதுவும் பக்கி களுக்கு மூளை முட்டியில் உள்ளது என கூறுவது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X