சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிப்பறி திருடர்கள் ஒன்பது பேர் சிக்கினர்

Added : டிச 29, 2020
Share
Advertisement
தரமணி : தரமணியில், இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து, பணம் பறித்த எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர். செங்குன்றத்தைச் சேர்ந்தவர் ராஜா, 40. இவரது, உறவினர் வீடு தரமணியில் உள்ளது. கடந்த, 26ம் தேதி, இருசக்கர வாகனத்தில் அங்கு செல்லும்போது, தரமணி ரயில் நிலையம் அருகில் வைத்து, எட்டு பேர் வழி மறித்தனர்.இவர்கள், ராஜா வைத்திருந்த, 3,000 ரூபாய், கைக்கடிகாரம் மற்றும் மொபைல் போனை

தரமணி : தரமணியில், இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து, பணம் பறித்த எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றத்தைச் சேர்ந்தவர் ராஜா, 40. இவரது, உறவினர் வீடு தரமணியில் உள்ளது. கடந்த, 26ம் தேதி, இருசக்கர வாகனத்தில் அங்கு செல்லும்போது, தரமணி ரயில் நிலையம் அருகில் வைத்து, எட்டு பேர் வழி மறித்தனர்.இவர்கள், ராஜா வைத்திருந்த, 3,000 ரூபாய், கைக்கடிகாரம் மற்றும் மொபைல் போனை பறித்து, 'கூகுள் பே' வழியாக, மேலும், 2,000 ரூபாய் பறித்தனர். தரமணி போலீசார் விசாரணையில், தரமணியைச் சேர்ந்த விக்னேஷ், 21, பிரகாஷ், 21, உள்ளிட்ட, எட்டு பேர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.நேற்று முன்தினம், எட்டு பேரையும் கைது செய்த போலீசார், 1,000 ரூபாய், கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்

பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அஸ்மத், 18. இவர் நேற்று முன்தினம் மாலை, 4:00 மணியளவில், வண்ணாரப்பேட்டை, மூன்றாவது தெரு, இளைய தெரு சந்திப்பு வழியாக, இரு சக்கர வாகனத்தில் சென்றார்.அப்போது, அந்த வழியாக மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த, கொருக்குப்பேட்டை, திருநாவுக்கரசு தோட்டத்தைச் சேர்ந்த, ரவுடியாக வலம் வரும் சியான் முருகன், 21, என்பவர், உருட்டுக்கட்டையால் தாக்கி, 2,000 ரூபாய் பறித்துச் சென்றார். இது குறித்து விசாரித்த, கொருக்குப்பேட்டை போலீசார் சியான் முருகனை கைது செய்து, கத்தி மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X