சென்னை:புதிதாக துவக்கப்பட்ட, ஐந்து மாவட்டங்களில், தீயணைப்பு துறைக்கான மாவட்ட அலுவலகங்களை, முதல்வர் இ.பி.எஸ்., 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார்.
தமிழகத்தில், புதிதாக துவக்கப்பட்ட, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்துார், கள்ளக்குறிச்சி, தென்காசி மாவட்டங்களில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான மாவட்ட அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றை, நேற்று முன்தினம், தலைமை செயலகத்தில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் வழியே, முதல்வர் திறந்து வைத்தார். அத்துடன், மெரினா மீட்புப் பணிகள் நிலையத்தின் பயன்பாட்டிற்காக, கொள்முதல் செய்யப்பட உள்ள, இரண்டு நீர் ஊர்திகள் மற்றும் அனைத்து நிலைகளிலும் இயங்கும் ஊர்திகள் ஆகியவற்றின் செயல்பாட்டை விளக்கும் குறும்படத்தை, முதல்வர் பார்வையிட்டார்.
சென்னை மாவட்டம், வேப்பேரி; திருவள்ளூர் மாவட்டம், அயனம்பாக்கம் ஆகிய இடங்களில், 2.20 கோடி ரூபாய் செலவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிருக்கான விடுதி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை, முதல்வர் திறந்து வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE