சென்னை:'போக்குவரத்து வாகனங்களில், ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள வேகக் கட்டுப் பாட்டுக் கருவிகள் வேலை செய்தாலே போதும்' என, போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இது குறித்து, தமிழக போக்குவரத்து துறை துணை கமிஷனர், மண்டல அதிகாரிகள், ஆர்.டி.ஓ.,க்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: போக்குவரத்து வாகனங்களுக்கு, ஏற்கனவே பொருத்தப்பட்ட வேகக் கட்டுப்பாட்டு கருவிகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள், தேசிய தகவல் மையமான, என்.ஐ.சி.,யில் பதிவேற்றப்பட்டு உள்ளன.
அந்த கருவிகள் தற்போது வேலை செய்யும் நிலையில் இருந்தால், அந்த வாகனங்களின் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளுக்கு புதுப்பிப்பு சான்று தேவையில்லை. வேகக் கட்டுப்பாட்டு கருவி தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கும் சான்றுகள் போதும்.
சமீப காலங்களில் வாகன தயாரிப்பு நிறுவனங்களே, வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்துகின்றன. அவற்றின் தகவல்களை சரிபார்த்தாலே போதும்.எனவே, வாகனச் சான்று புதுப்பிக்க வரும் வாகனங்களில், வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் வேலை செய்வதை, அந்த வாகனத்துக்கான கருவிதானா என்பதை, 'வாகன்' மென்பொருளின் வழியாக உறுதி செய்து, வாகன புதுப்பிப்பு சான்று வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE