சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.47.80 லட்சம் மதிப்பு தங்கம் ட்ரோன்கள் பறிமுதல்

Added : டிச 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, 47.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான, தங்கம், 'ட்ரோன்'கள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளை, சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஐக்கிய அரபு நாடான, யு.ஏ.இ.,யின், துபாய் நகரில் இருந்து, 'பிளை துபாய்' விமானம் நேற்று முன்தினம் இரவு, 9:50 மணிக்கு, சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த, சென்னையைச் சேர்ந்த கருப்பசாமி, 65, சசிகுமார், 31,
 ரூ.47.80 லட்சம் மதிப்பு  தங்கம் ட்ரோன்கள் பறிமுதல்

சென்னை:துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, 47.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான, தங்கம், 'ட்ரோன்'கள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளை, சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஐக்கிய அரபு நாடான, யு.ஏ.இ.,யின், துபாய் நகரில் இருந்து, 'பிளை துபாய்' விமானம் நேற்று முன்தினம் இரவு, 9:50 மணிக்கு, சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த, சென்னையைச் சேர்ந்த கருப்பசாமி, 65, சசிகுமார், 31, ஆகியோரின் உடைமைகளை, சுங்கத் துறையினர் சோதனைஇட்டனர்.

அப்போது, அவர்களது பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 6.17 லட்சம் ரூபாய் மதிப்பிலான, நான்கு ட்ரோன்கள்மற்றும் அதன், 10 பேட்டரிகள், வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டன.இதே விமானத்தில் வந்த, ராமநாதபுரத்தைச் சேர்ந்த, முகமது இஸ்மாயில், 52, என்பவரை சோதனையிட்ட போது, அவரது உள்ளாடைக்குள் இருந்து, 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 214 கிராம் தங்க கட்டிகள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மற்றொரு சம்பவத்தில், துபாயிலிருந்து, 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானம் நேற்று காலை, 8:30 மணிக்கு, சென்னைக்கு வந்தது.அந்த விமானத்தில் வந்த, மன்னார்குடியைச் சேர்ந்த புவியரசன், 25, என்பவரின் ஆசனவாயிலிருந்து, 30.63 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 593 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.கடத்தலில் ஈடுபட்ட, நான்கு பேரையும் கைது செய்து, சுங்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
30-டிச-202016:26:07 IST Report Abuse
Dr. Suriya இப்போ பிடிபடறவங்க எல்லாம்... குருவிங்க தான்....இதன் பின்னணியில் பெரிய அரசியலே இருக்கும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X