பொது செய்தி

தமிழ்நாடு

சற்குருநாத ஓதுவார்- திருமுறை இசை

Added : டிச 29, 2020
Share
Advertisement
கடந்த வெள்ளிக்கிழமை, தமிழ் இசை சங்கத்தின், 78வது ஆண்டின், மூன்றாவது நாளின் முதல் நிகழ்வாக, சற்குருநாத ஓதுவாரின் திருமுறை இசையை நேரலையாகக் கேட்கவும், பார்க்கவும் பெற்றோம்.கல்லிடைக்குறிச்சி பாலகிருஷ்ணன் வயலின், திருவண்ணாமலை சிவகுமார் மிருதங்கம்.ஓதுவார் பாடிய பாடல்களும், அவற்றிற்கான திருத்தலங்களும், ராகங்களும், நிகர் பண்களும், அவற்றை அருளியவர்களும், கீழுள்ளபடி

கடந்த வெள்ளிக்கிழமை, தமிழ் இசை சங்கத்தின், 78வது ஆண்டின், மூன்றாவது நாளின் முதல் நிகழ்வாக, சற்குருநாத ஓதுவாரின் திருமுறை இசையை நேரலையாகக் கேட்கவும், பார்க்கவும் பெற்றோம்.கல்லிடைக்குறிச்சி பாலகிருஷ்ணன் வயலின், திருவண்ணாமலை சிவகுமார் மிருதங்கம்.ஓதுவார் பாடிய பாடல்களும், அவற்றிற்கான திருத்தலங்களும், ராகங்களும், நிகர் பண்களும், அவற்றை அருளியவர்களும், கீழுள்ளபடி விவரிக்கப்பட்டுள்ளன:பொதுவாகவே, இது போன்ற திருமுறை இசை நிகழ்வுகளில், பெரிதாக ராக விஸ்தாரங்களோ அல்லது கற்பனை ஸ்வரங்களோ எதிர்பார்க்க முடியாது.

ராகங்களின் போக்குகளைக் காட்டிவிட்டு, திருமுறைகளைப் பாடத் துவங்கி விடுவர்.அது தான் இங்கே பிரதானம். இந்த வகையான இசையையும், இதைப் போற்றிப் பாடிவரும் கலைஞர்களை ஊக்குவிப்பதே, இங்குள்ள நோக்கம்.இந்நிகழ்வில், சற்குருநாத ஓதுவார் கரஹரப்ரியா, ஹரிகாம்போதி என்ற இரண்டு ராகங்களுக்கு, சிறிய ஆலாபனைகள் வழங்கினார். இவ்விடங்களில், வயலினில், கல்லிடைக்குறிச்சி பாலகிருஷ்ணன் தனக்கு ஓதுவார் கொடுத்த வாய்ப்பைப் பயனாக்கும் விதமாக, அவரும் குறிப்பறிந்து அளவான ராக விஸ்தரிப்புகளைக் கொடுத்தார்.

கடைசியில் வந்த, ராகமாலிகையில், ஓதுவார் வழங்கிய ரஞ்சனி ராகமும், இதிலிருந்து கானடாவிற்கு நடந்த ராகமாற்றமும் போற்றத்தக்கதாய் இருந்தன.மிருதங்கத்தில், சிவகுமார் தக்க நடைகளைக் கொடுத்துக் கொண்டே வந்தது, பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.- எஸ். சிவகுமார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X