சென்னை:'நீட்' தேர்வு மதிப்பெண் சான்றிதழ் மோசடி வழக்கில் தேடப்படும் மாணவி, அவரது தந்தை ஆகியோர் பெங்களூரில் இருப்பதால், தனிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர்.
போலியாக தயாரிக்கப்பட்ட, நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்து, மருத்துவ கல்லுாரியில் சேர முயன்ற, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த, மாணவி தீக் ஷா, 18; அவரது தந்தை பல் டாக்டர் பாலசந்திரன் ஆகியோரை, சென்னை பெரியமேடு போலீசார் தேடி வருகின்றனர்.விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, மூன்று முறை சம்மன் அனுப்பியும் வராததால், இருவரையும் கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.
இருவரும் கேரளாவில் பதுங்கி இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், தீக் ஷா மற்றும் பாலசந்திரன் ஆகியோர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE