சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செங்கல் சூளை உரிமையாளர்கள் சின்னத்தடாகத்தில் சாலை மறியல்

Added : டிச 29, 2020
Share
Advertisement
பெ.நா.பாளையம்,:சின்னத்தடாகத்தில், செங்கல் சூளை தொழிலாளர்களை தாக்கிய நபர்களை கைது செய்ய வேண்டும் எனக்கோரி, செங்கல் சூளை உரிமையாளர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.சின்னத்தடாகம் வட்டாரத்தில், சட்டத்துக்கு புறம்பாக மண் அள்ளும்போக்கு அதிகரித்து வருவதாக, அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் கணேசன், சவுந்திரராஜன் உள்ளிட்டோர், மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து, பல்வேறு
 செங்கல் சூளை உரிமையாளர்கள் சின்னத்தடாகத்தில் சாலை மறியல்

பெ.நா.பாளையம்,:சின்னத்தடாகத்தில், செங்கல் சூளை தொழிலாளர்களை தாக்கிய நபர்களை கைது செய்ய வேண்டும் எனக்கோரி, செங்கல் சூளை உரிமையாளர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.சின்னத்தடாகம் வட்டாரத்தில், சட்டத்துக்கு புறம்பாக மண் அள்ளும்போக்கு அதிகரித்து வருவதாக, அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் கணேசன், சவுந்திரராஜன் உள்ளிட்டோர், மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து, பல்வேறு மனுக்கள் அனுப்பி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், நேற்று, நாயக்கன்பாளையத்தை சேர்ந்த கர்ணன், சின்னதடாகத்தில் தனக்கு சொந்தமான நிலம் வழியாக, செம்மண் கொண்டு செல்லப்படுவதாக அறிந்து, அந்த வழியாக சென்ற டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தினார்.அப்போது, கர்ணன் தரப்பினருக்கும், டிப்பர் லாரி டிரைவர் தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தடாகம் போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.நேற்று மாலை, சின்னத் தடாகம் பஸ் நிறுத்தத்தில், செங்கல் சூளை உரிமையாளர்கள், தொழிலாளர்கள், 100க்கணக்கானோர் திரண்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதில், டிப்பர் லாரியில் மண் ஏற்றிச்சென்ற தொழிலாளர்களை தாக்கிய நபர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்ததையொட்டி, மறியலில் ஈடுபட்டவர்கள் புகார் கொடுக்க, தடாகம் போலீஸ் ஸ்டேஷன் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X