பொது செய்தி

தமிழ்நாடு

ஆழ்வார்பேட்டையில் ஆன்மிக பொருட்கள் கண்காட்சி

Added : டிச 29, 2020
Share
Advertisement
சென்னை : ஆழ்வார்பேட்டையில், ருத்ராட்சம் முதல் மரகதம்,மாணிக்கம் போன்ற விலை உயர்ந்த கற்களால் ஆன சுவாமி சிலைகள் வரையிலான, ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருட்களின் விற்பனை கண்காட்சி நடக்கிறது. சென்னை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே., சாலையில் உள்ள சங்கராஹாலில், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருட்களின் விற்பனை கண்காட்சி, 'சிவாம்சம்' என்ற பெயரில் நடக்கிறது.இந்த கண்காட்சியில், 1-21 முகங்கள்

சென்னை : ஆழ்வார்பேட்டையில், ருத்ராட்சம் முதல் மரகதம்,மாணிக்கம் போன்ற விலை உயர்ந்த கற்களால் ஆன சுவாமி சிலைகள் வரையிலான, ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருட்களின் விற்பனை கண்காட்சி நடக்கிறது.

சென்னை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே., சாலையில் உள்ள சங்கராஹாலில், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருட்களின் விற்பனை கண்காட்சி, 'சிவாம்சம்' என்ற பெயரில் நடக்கிறது.இந்த கண்காட்சியில், 1-21 முகங்கள் கொண்ட பல வகை ருத்ராட்சம்,1 - 14 முகங்களை கொண்ட ருத்ராட்சங்களால் ஆன சித்த மாலை, 1 - 21 முகங்களை கொண்ட இந்திர மாலை, கணேஷ் துதிக்கை ருத்ராட்சம், தியானம் செய்ய ருத்ராட்ச பந்தல் போன்ற பல்வேறு வகையான ருத்ராட்சங்கள் விற்பனைக்கு உள்ளன.ஸ்படிகம், கருங்காலி, சந்தனம், துளசிகளால் ஆன கழுத்தில் அணியும் மாலைகள் கிடைக்கின்றன.

நவரத்தினம், மரகதம்,மாணிக்க கற்களால் செய்யப்பட்ட லிங்கம், விநாயகர் போன்ற சிறிய, பெரிய அளவிலான சுவாமி சிலைகள், மற்றும் தாமிரத்தால் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் உள்ளன.மேலும், 25 கிலோ எடையுள்ள, ஐந்து முக மாணிக்க சிவலிங்கம், மரகத பச்சை விநாயகர் சிலை, இக்காண்காட்சியின் சிறப்பம்சமாக விற்பனைக்கு உள்ளன.சாலகிராமம், பான லிங்கம், கோமதி சக்கரம், லகுநாரியல், வலம்புரி, இடம்புரி சங்குகள் போன்ற பூஜையறையில் வைக்க கூடிய பொருட்கள், 'பாஸிடிவ் எனர்ஜி' கொடுக்கும் ஜியோடு, உபரத்தின கற்களில் ஆன மரங்கள், போன்ற பொருட்கள், 150 ரூபாய் முதல், 24 லட்சம் ரூபாய் வரை விற்பனைக்கு உள்ளன.காலை, 10:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரை நடக்கும் இக்கண்காட்சி, ஜன., 5ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

கண்காட்சியை நடத்தி வரும் சோமசுந்தரம் கூறியதாவது:என் வயது, 80; நான் பூம்புகார் விற்பனை நிலையத்தில், சென்னை, மதுரை போன்ற பல்வேறு இடங்களில் மேலாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றேன்.அங்கு வேலை பார்த்த அனுபவத்தில், பொருட்களில் அசல் எது; போலி எது என, என்னால் எளிதில் கண்டுபிடிக்க முடியும்.தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில், கண்காட்சியை ஒன்பது ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆன்மிக பொருட்களை வாங்கி, கண்காட்சியில், விற்பனை செய்து வருகிறேன்.ஆன்மிகத்தில் ஈடுபாடு இருப்பதால், பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம், அது சம்பந்தமான விஷயங்களை விளக்கமாக எடுத்து சொல்ல முடிகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X