பரமக்குடி : பரமக்குடியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில்திடீரென பச்சை மற்றும் பழுப்பு நிறத்தி லான கொசுக்கள் படை யெடுக்கின்றன.இவை உடலில் அமரும் போது ஒருவிதஅரிப்பு உண்டாவதால் மக்கள் பயத்துடன் உள்ளனர்.
பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மார்ச் தொடக் கத்தில் கொரோனா தாக்கம் இருந்தது.தொடர்ந்து அதிகரித்த கொரோனா பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தற்போது கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. இந்நிலையில் நவம்பரில் தொடங்கி, டெங்கு வைரஸ் பரவலால் பரமக்குடி, எமனேஸ்வரம் மற்றும் அருகில் உள்ளகிராமப்பகுதி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைபாதிக்கப்பட்டு சிகிச்சை யில் உள்ளனர். சிலர் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியுள்ளனர்.
தொடர்ந்து தற்போது மாலை நேரங்களில் திடீர், திடீர் என பச்சை மற்றும் பழுப்பு நிறத்திலான கொசுக்கள் விளக்குவெளிச்சத்தை நோக்கி படையெடுக்கிறது. இவை உடலில் அமர்ந்தவுடன் ஒரு வித அரிப்பு உண்டா கிறது.இவை நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்த படி இருப்பதால்சில கொசுக்கள் அப்படியே இறந்து விடுகின்றன. நகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் பொது மக்களைதொற்றி லிருந்து பாதுகாக்க நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE