சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையில் திடீர் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

Added : டிச 29, 2020
Share
Advertisement
புழல் : நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. சென்னை, புழல் அடுத்த லட்சுமிபுரம், காந்திஜி தெரு, செம்பியம் - செங்குன்றம் நெடுஞ்சாலை சந்திப்பில், நேற்று காலை, திடீரென, இரண்டு அடி நீளம், இரண்டு அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.இதனால், அந்த சாலையில் செல்லும் கனரக வாகனங்களின் அழுத்தம் தாங்காமல், மேலும் சேதம் அடைந்து, சாலை

புழல் : நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது.

சென்னை, புழல் அடுத்த லட்சுமிபுரம், காந்திஜி தெரு, செம்பியம் - செங்குன்றம் நெடுஞ்சாலை சந்திப்பில், நேற்று காலை, திடீரென, இரண்டு அடி நீளம், இரண்டு அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.இதனால், அந்த சாலையில் செல்லும் கனரக வாகனங்களின் அழுத்தம் தாங்காமல், மேலும் சேதம் அடைந்து, சாலை துண்டிக்கப்படும் நிலை உள்ளது.அந்த இடத்தை கடக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் அச்சத்தில் கடந்து செல்கின்றனர். இரவில், நிலைமை மேலும் மோசமாகும்.

இது குறித்து, மாதவரம் மண்டல அதிகாரிகளிடம், அந்த பகுதி மக்கள் புகார் செய்தனர். ஆனாலும், தற்காலிக சீரமைப்பு நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை.விபத்து, உயிரிழப்பை தவிர்க்க, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X