ராமநாதபுரத்தில் மழையால் இயல்புவாழ்க்கை பாதிப்பு: மக்கள் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் மழையால் இயல்புவாழ்க்கை பாதிப்பு: மக்கள் அவதி

Added : டிச 29, 2020
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நேற்று காலை முதல் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.ராமநாதபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் காலை 9:00மணி வரை மார்கழி பனியின் தாக்கம் உள்ளது.நேற்று அதிகாலை முதல் மதியம் வரை தொடர்ந்து மிதமான மழைபெய்துகொண்டே இருந்தது. இதனால் அலுவலகம், கல்லுாரி, பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், சாலையோர

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நேற்று காலை முதல் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

ராமநாதபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் காலை 9:00மணி வரை மார்கழி பனியின் தாக்கம் உள்ளது.நேற்று அதிகாலை முதல் மதியம் வரை தொடர்ந்து மிதமான மழைபெய்துகொண்டே இருந்தது. இதனால் அலுவலகம், கல்லுாரி, பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். மழையால் குண்டுக்கரை முருகன்கோயில் அருகே பாதாளசாக்கடை கழிவுநீர் அப்பகுதியில் ஓடியதால் துர்நாற்றத்தினால் மக்கள் சிரமப்பட்டனர்.

ராமேஸ்வரம் ரோடு, மதுரை ரோட்டில் பனி மூட்டம் காரணமாக வாகனஓட்டிகள் முகப்புவிளக்குகளை பயன்படுத்தி சென்றனர். மழையால் ராமநாதபுரம் நகர் மார்க்கெட் அரண்மனை பகுதி, அக்ரஹார தெரு, பட்டணம்காத்தான், சக்கரகோட்டை ஊராட்சி ஆகிய பகுதியில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகனஓட்டிகள் சிரமப்பட்டனர். நேற்றைய மழையால் மக்கள் வீடுகளுக்கு முடங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X