பேரூர்:பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், இன்று அதிகாலையில் நடைபெறும், ஆருத்ரா தரிசன அபிஷேகத்தில் பங்கேற்க, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சிவாலயங்களில் மார்கழி மாதத்தில் வரும், திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக கொண்டாடப்படும். அந்த நாளில், 'மேலை சிதம்பரம்' என, போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருக்கு, 27 திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படும்.நடப்பாண்டு, ஆருத்ரா தரிசன விழா, இன்று அதிகாலை, 3:30 மணிக்கு நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக, நடராஜர் அபிஷேகம் மற்றும் சுவாமி புறப்பாட்டிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என, பேரூர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.அதே சமயம், ஆருத்ரா தரிசன விழா நிறைவடைந்ததும், பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE