ராமேஸ்வரம் : சைக்கிள் ஓட்டி உடல் ஆரோக்கியம் மேம்படுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மகாராஷ்டிரா முதல் கன்னியாகுமரிக்கு இளைஞர்கள் 2 ஆயிரம் கி.மீ., சைக்கிள் பயணமாக நேற்று ராமேஸ்வரம் வந்தனர்.
மகாராஷ்டிரா கோலாப்பூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனம், சுயதொழில் புரியும் இளைஞர்கள் 85 பேர், சைக்கிள் ஓட்டுவதால் உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதிப்பு இருக்காது என்பதை வலியுறுத்தியும், உலக நன்மைக்காகவும் டிச.,16ல் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை துவக்கினர்.
இவர்கள் கர்நாடகா, ஆந்திரா வழியாக வந்து சென்னை, திருச்சி வழியாக நேற்று ராமேஸ்வரம், தனுஷ்கோடி சென்றனர். இவர்கள் தினமும் 130 முதல் 150 கி.மீ., துாரத்தை கடந்ததாகவும், வழியில் மக்களிடம் சைக்கிள் ஓட்டுதல் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.இன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் இளைஞர்கள், 2 ஆயிரம் கி.மீ., சைக்கிள் பயணத்தை ஜன.,1ல் கன்னியாகுமரியில் நிறைவு பெற உள்ளதாக தெரிவித்தனர்.--
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE