கோவை:நஞ்சுண்டாபுரத்தில் இருந்து மருதமலை நோக்கி, 'எஸ்26' வழித்தட எண் கொண்ட அரசு பஸ், காந்திபுரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, நேற்று காலை சென்றுகொண்டிருந்தது. ஆர்.எஸ்., புரம் கவுலிபிரவுன் ரோடு அருகே சென்றபோது, குழாய் பதிக்க தோண்டி, மூடப்பட்ட மண் சகதியில் பஸ்சின் முன் சக்கரம் இறங்கியது. சம்பவ இடத்துக்கு வந்த, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன் பஸ்சை மீட்டனர். பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்புஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE