தமிழ்நாடு

சொல்லி விடும் 'எம்.புக்!' பொறியியல் அதிகாரிகள் திக்...திக்...தரமற்ற பணியை கண்டறிய கமிட்டி

Updated : டிச 30, 2020 | Added : டிச 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை;கோவை மாநகராட்சி சார்பில் நடக்கும் பணிகளின் தரத்தை உறுதி செய்யவும், கோப்புகளின் உண்மை தன்மையை ஆய்வு செய்யவும், மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதனால், பொறியியல் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கோவை மாநகராட்சியில், பொறியியல் பிரிவினரின் பணி மிக முக்கியமானது. ரோடு போடுவது; மழை நீர் வடிகால் கட்டுதல்; தெருவிளக்கு
 சொல்லி விடும் 'எம்.புக்!' பொறியியல் அதிகாரிகள் திக்...திக்...தரமற்ற பணியை கண்டறிய கமிட்டி

கோவை;கோவை மாநகராட்சி சார்பில் நடக்கும் பணிகளின் தரத்தை உறுதி செய்யவும், கோப்புகளின் உண்மை தன்மையை ஆய்வு செய்யவும், மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதனால், பொறியியல் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில், பொறியியல் பிரிவினரின் பணி மிக முக்கியமானது. ரோடு போடுவது; மழை நீர் வடிகால் கட்டுதல்; தெருவிளக்கு அமைத்தல்; கட்டடங்கள் கட்டுதல்; டெண்டர் கோருதல்; பொருட்கள் கொள்முதல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர்.
நகர பொறியாளர் தலைமையில், நிர்வாக பொறியாளர்கள், உதவி நிர்வாக பொறியாளர்கள், உதவி/ இளம் பொறியாளர்கள் பணிபுரிகின்றனர். எந்தவொரு பணி செய்வதாக இருந்தாலும், 'எம் - புக்' என்றழைக்கப்படும், அளவீடு புத்தகம் கையாள்வது வழக்கம்.உதாரணத்துக்கு, ரோடு போடுவதாக இருப்பின், எவ்வளவு துாரம்; எங்கிருந்து எது வரை; அகலம் எத்தனை அடி உள்ளிட்ட அளவீடுகளை துல்லியமாக எழுதி, மதிப்பீடு குறிப்பிட்டு, உதவி/ இளம் பொறியாளர் கையெழுத்திட வேண்டும்.மண்டல உதவி நிர்வாக பொறியாளர், நிர்வாக பொறியாளர்கள் பரிந்துரைத்து கையெழுத்திட்டிருக்க வேண்டும்.
அதன்பின், நகர பொறியாளர் ஒப்புதல் வழங்கிய பிறகே, பணியை மேற்கொண்டு, பில் தொகை வழங்க, பரிந்துரைக்க வேண்டும்.ஆனால், கடந்த காலங்களில் அத்தகைய நடைமுறையை முறையாக பின்பற்றாமல், பணம் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய கமிஷனர் ஷ்ரவன்குமார், ஆர்.எஸ்.புரம் குடியிருப்பை காலி செய்தபோது, அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்றதாக, குற்றச்சாட்டு கிளம்பியது.அப்போது, 'எம் - புக்' கேட்டபோது, பொறியியல் பிரிவினர் முழித்தனர். அப்படியொரு புத்தகம் கையாளவில்லை என்பது தெரியவந்தது. அதன் பின், மேலும் இரு இடங்களில், 'எம் - புக்' இல்லாமலேயே பணி செய்து, பில் கேட்டு, கோப்பு சமர்ப்பித்ததையும், உயரதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணவும், நிர்வாகத்தை சீர்திருத்தும் வகையிலும், பில்லுக்கு வந்துள்ள கோப்புகள் சரியாக கையாளப்பட்டுள்ளனவா என்பதை கண்டறியவும், செய்யப்பட்ட பணியின் தரம் சரியாக இருக்கிறதா என்பதை கள ஆய்வு செய்து, உறுதிப்படுத்தவும், நிர்வாக பொறியாளர் பார்வதி, உதவி நிர்வாக பொறியாளர் பாபு, உதவி பொறியாளர் குமார் ஆகியோர் கொண்ட கமிட்டியை, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நியமித்துள்ளார்.இதையறிந்த, பொறியியல் பிரிவினர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கமிட்டியில் உள்ள அதிகாரிகள், பில்லுக்கு வந்துள்ள கோப்புகளில் உள்ள இடங்களுக்கு, கள ஆய்வு செய்து, தரத்தை உறுதி செய்கின்றனர். குறிப்பிட்ட தரம் இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர்களுக்கு தெரிவித்து, மீண்டும் பணி செய்ய அறிவுறுத்துகின்றனர்.
செய்யப்பட்ட வேலையில் என்ன தவறு இருக்கிறது என்பதையும், கோப்புகளில் எழுத்துப்பூர்வமாக, கமிட்டி உறுப்பினர்கள் எழுதுவதால், ஒப்பந்ததாரர்கள் பீதிக்குள்ளாகி உள்ளனர்.இனி தப்ப முடியாதுதரம் உறுதி செய்யும் கமிட்டியில் நியமிக்கப்பட்டுள்ள மூவரும், கள ஆய்வு செய்யாமல், கோப்புகளில் கையெழுத்திடுவதில்லை; எவ்விதத்திலும் சமரசத்துக்கு இடமளிப்பதில்லை.
ஆறு மாதத்துக்கு பின் ஆய்வுக்கு சென்றிருந்தாலும், தரமற்ற பணியாக இருந்தால், சீரமைத்துக் கொடுத்தால் மட்டுமே, கோப்புகளில் கையெழுத்து போடுகின்றனர்.'மேடம், ரோடு போட்டு ஆறு மாசமாச்சு; ஆய்வு செய்யறது லேட்' என, ஒப்பந்ததாரர்கள் தரப்பில் சொன்னாலும், ஆறு மாதத்துக்குள் ஏன் |பழுதடைந்தது; அவ்வாறு ஆகக்கூடாது; குழிகளை மூடி விட்டு வாருங்கள்' என, கமிட்டியினர் கூறுவதால், ஒப்பந்ததாரர்களில் சிலர், தலைதெறிக்க ஓட்டம் பிடிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
30-டிச-202019:04:42 IST Report Abuse
S. Narayanan To improve the quality and construction we have to adhere these type of guidelines.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X