சென்னை:தமிழகத்தில், கொரோனா பரவல் குறைந்து வருவதால், பல மாதங்களுக்கு பின், தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஆயித்துக்கு கீழ், குறைந்துள்ளது.
இதுகுறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 235 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 64 ஆயிரத்து, 768 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.அதில், சென்னையில், 286 பேர்; கோவையில், 81 பேர்; செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா, 47 பேர் உட்பட, மாநிலம் முழுதும், 957 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இருந்து வந்த, 2,300 பேரில், 19 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதில் ஒருவருக்கு, உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்தோரில், 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை, 1.40 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், எட்டு லட்சத்து, 16 ஆயிரத்து, 132 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சையில் இருந்தோரில், 1,065 பேர் நேற்று குணமடைந்தனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை, ஏழு லட்சத்து, 95 ஆயிரத்து, 293 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.தற்போது, சென்னையில், 2,711 பேர்; கோவையில், 834 பேர்; செங்கல்பட்டில், 609 பேர் உட்பட, 8,747 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா தொற்றால், திருச்சியில் மூன்று பேர்; சென்னை, கோவையில் தலா இருவர் உட்பட நேற்று, 12 பேர் இறந்தனர். இவர்களுடன் சேர்த்து, இதுவரை, 12 ஆயிரத்து, 92 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE