ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அரசு சலுகையுடன் ரூ.10 லட்சம் வரை இடைநிலை மூலதன கடன் உதவி வழங்கப்படுகிறது.
விவசாயிகள் ஒன்றிணைந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சாகுபடி மட்டுமல்லாது, வணிக ரீதியாக வளரும் வகையில் 4 ஆண்டுகளில் செயல்படுத்தும் விதமாக ரூ. 266.70 கோடி தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி தகுதி வாய்ந்த வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இடைநிலை மூலதன உதவி ரூ.10லட்சம் வரை கடனுதவி தொகை வழங்கப்படுகிறது. இதன்மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் விளைப்பொருட்களை லாபகரமாக சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும்,
குறைந்த வட்டியாக 4 சதவீதம் வட்டி ஆண்டுதோறும் செலுத்த வேண்டும். மேலும் உழவர் உற்பத்தியாளர்கள் வங்கியில் கடன் பெறுவதற்கு ரூ.1 கோடி வரை கடன்பெறுவதற்கு வங்கிகள், நாப்கிசான் நிறுவனத்திற்கு 50 சதவீத உத்தரவாதத்தை அரசே வழங்குகிறது. இதுதொடர்பாக வேளாண் விற்பனை, வணிகத்துறை மற்றும் நாப்கிசான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவவனங்கள் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.---
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE