கோவை:நாடு முழுவதும், கொரோனா நோய் தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறிய, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.எம்.ஆர்.,) சார்பில் நாடு முழுவதும், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுஆய்வு செய்யப்படுகிறது. அந்த வகையில், கோவை, திருவண்ணாமலை, சென்னை ஆகிய மாவட்டங்களில், ஆய்வு செய்யப்பட்டது.கோவையை பொறுத்தவரை, கடந்த மே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட ஆய்வில் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பெ.நா.பாளையம், சுந்தராபுரம், குனியமுத்துார், ஆர்.எஸ்.புரம், விளாங்குறிச்சி என, 10 இடங்களில் தலா 40 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரித்து, ஆய்வு செய்யப்பட்டது.அதில், 2.5 சதவீதம் நபர்களின் உடலில், கொரோனா நோய் தொற்றுக்கான எதிர்ப்பு உயிரி உண்டாகியிருந்தது தெரியவந்தது. இரண்டாம் கட்ட ஆய்வில், 7.5 சதவீதம் பேருக்கு எதிர்ப்பு உயிரி உண்டாகியிருந்தது. இந்நிலையில் மூன்றாம் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.சுகாதாரதுறை அதிகாரிகள் கூறுகையில், 'இந்த ஆய்வு, கொரோனா பாதிப்பு சமூகத்தில் எந்தளவு பரவியுள்ளது என்பதை கண்டறிந்து அதற்கேற்ப, சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும். இதுவரை, கோவையில் அதிகபட்சமாக, 22.5 சதவீதம் நபர்களுக்கு மட்டுமே, எதிர்ப்பு உயிரி உருவாகியிருப்பது தெரியவந்தது.தற்போதைய ஆய்வில், 25 சதவீதத்துக்கு மேல் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது. முன்பு மேற்கொண்ட அதே பகுதிகளில், மேலும் 400 பேர், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், நர்ஸ்கள், சுகாதார பணியாளர்கள், 100 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்படவுள்ளது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE