ராணிப்பேட்டை:''அ.தி.மு.க., இரண்டாக உடைய போகிறது,'' என, மக்கள் சபைக் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அனந்தலையில், தி.மு.க., சார்பில், மக்கள் சபை கூட்டம் நேற்று நடந்தது. அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:கிராம சபை என்றால், முதல்வருக்கு கோபம் வருகிறது. இந்த ஆட்சியில் நடக்கும் ஊழல்களை, சபையில் மக்கள் சொல்வதை, 'டிவி'யில் அமைச்சர்கள் பார்க்கின்றனர்.
முடிவு
இதனால், கிராம சபா கூட்டம் நடத்தக்கூடாது என உத்தரவிட்டனர். பிரச்னை வேண்டாம் என, மக்கள் சபைக் கூட்டம் என, மாற்றி நடத்துகிறோம்.கொரோனா காலத்தில், வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு, 5,000 ரூபாய் வழங்க சொன்னேன். ஆனால், 1,000 ரூபாய் அறிவித்தனர். விரைவில், சட்டசபை தேர்தல் வருவதையொட்டி, இப்போது பொங்கலுக்கு, 2,500 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளனர்
அண்ணாதுரை மீது ஆணையாக, சத்தியமாக சொல்கிறேன், பொங்கல் பரிசு பணத்தை, நான் தடுக்கவில்லை. உயர்த்தி கொடுங்கள் என்றுதான் கேட்கிறேன். அது அரசின் பணம். இதை வழங்க, திமு.க., தடையாக இருக்காது.இந்த மக்கள் சபை கூட்டத்தை, மேலும், 10 நாட்கள் நீடிக்கிறோம். தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார் என, மக்கள் முடிவு செய்து விட்டனர்.
நிச்சயம்
ஆனால், அ.தி.மு.க.,வில் முதல்வர் வேட்பாளர் யார் என, போர் நடக்கிறது. கூடி உட்கார்ந்து பேசி, முதல்வர் வேட்பாளர் இ.பி.எஸ்., என அறிவித்துள்ளனர்.ஆனால், இரண்டு நாட்களாக, முதல்வர் வேட்பாளரை, மோடி தான் முடிவு செய்ய வேண்டும் என, அமைச்சர்களே பேசி வருகின்றனர். எந்த நேரத்திலும், பன்னீர்செல்வம் கழன்று போகலாம். நிச்சயம், அ.தி.மு.க., இரண்டாக உடைய போகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE