கோவை:கோவை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில், புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு புத்தக கண்காட்சி நடக்கிறது.நேரு விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள, அரங்கில் நடக்கும் இந்த கண்காட்சியில், சங்க இலக்கியம், கம்பராமாயணம், சோழர் கால வரலாறு, சுயமுன்னேற்ற நுால்கள், ரஷ்ய இலக்கியத்தின் முக்கிய நுால்கள், நாவல்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுகளுக்கு தேவையான நுால்கள் என, ஏராளமான நுால்கள் இடம் பெற்றுள்ளன. 10 முதல் 50 சதவீதம் வரை, சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது.நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாளர் ரங்கராஜன் கூறுகையில், ''ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, இப்போதுதான் வாசகர்கள் புத்தகம் வாங்க வருகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்படும் இந்த கண்காட்சியில், சிறப்பு சலுகை அளிக்கப்படுகிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE