இரு ஆண்டுகளாகியும் தீராத பிரச்னை

Added : டிச 29, 2020
Share
Advertisement
கோவை:கல்வி மாவட்டம் பிரித்து இரு ஆண்டுகளாகியும், சீனியாரிட்டி கணக்கிடுவதில் சிக்கல் இருப்பதால், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாக சீர்த்திருத்தம் மேற்கொள்ளும் வகையில், 2018ல், கல்வி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. வருவாய் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்கள், பள்ளிகள் அடிப்படையில், கல்வி மாவட்ட எல்லைகள்

கோவை:கல்வி மாவட்டம் பிரித்து இரு ஆண்டுகளாகியும், சீனியாரிட்டி கணக்கிடுவதில் சிக்கல் இருப்பதால், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாக சீர்த்திருத்தம் மேற்கொள்ளும் வகையில், 2018ல், கல்வி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. வருவாய் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்கள், பள்ளிகள் அடிப்படையில், கல்வி மாவட்ட எல்லைகள் கணக்கிடப்பட்டன.கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி, சிட்டி கல்வி மாவட்டங்களாக ஏற்கனவே இருந்தன. புதிதாக, பேரூர், எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கான எல்லைகள் பிரிக்கப்பட்டு, பிரத்யேக மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, நிர்வாக பணிகள் கண்காணிக்கப்படுகின்றன.புதிதாக கல்வி மாவட்டம் பிரித்ததில், சில ஒன்றியங்களில் இருந்து, அரசுப்பள்ளிகள் வேறு ஒன்றியத்தில் இடம் பிடித்திருப்பதாக ஏற்கனவே புகார் எழுந்தது. இருப்பினும், கல்வி மாவட்ட எல்லையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால், சீனியாரிட்டி கணக்கிடுவதில் சிக்கல் தொடர்வதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'தொடக்க கல்வித்துறையை பொருத்தவரை, ஒன்றியம் வாரியாக சீனியாரிட்டி கணக்கிடப்பட்டு, பதவி உயர்வு வழங்கப்படுகிறது. பழைய ஒன்றியத்தில் இருந்து புதிய ஒன்றியம் மாறியிருப்பதால், பணி அனுபவம் இருந்தும், ஜூனியராக கருதப்படும் நிலை நீடிக்கிறது.இதனால், இடமாறுதல் பெறுவதிலும் சிக்கல் தொடர்கிறது. கொரோனா தொற்று காரணமாக, ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படவில்லை. எனவே, இக்கல்வியாண்டுக்கான கலந்தாய்வு அறிவிப்புக்கு முன், புதிய ஒன்றியங்களில் இணைக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் சீனியாரிட்டி பிரச்னைக்கு, தீர்வு காண வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X