சிவகங்கை : சிவகங்கையில் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற பி.டி.ஓ.,விற்கு டார்ச்சர் கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி, நேற்று கலெக்டர் அலுவலகம் முன் பி.டி.ஓ.,வின் உறவினர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகத்தில், வேலை உறுதி திட்ட பி.டி.ஓ.,வாக ரமேஷ் 58, பணிபுரிகிறார். இவரை உயர் அதிகாரிகள் சிலர் அடிக்கடி @டார்ச்சர்' செய்வதாக கூறி, புலம்பி வந்துள்ளார். டிச.,26 அன்று இரவு போன் மூலம் ரமேஷ்க்கு டார்ச்சர் கொடுத்துள்ளனர். டிச.,28 அன்று காலை வீட்டிற்கு அருகே கழுத்தில் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
நேற்று பி.டி.ஓ.,வின் மனைவி ஆசிரியை தமிழ்செல்வியின், சகோதரர் கல்லலை சேர்ந்த பாலமுருகன் 44, என்பவர் பெட்ரோலுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். பி.டி.ஓ.,வை டார்ச்சர் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளிக்க முயற்சித்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் சித்ரா, அவரிடமிருந்து பெட்ரோல் கேனை பறித்து, அவரை காப்பாற்றினார். அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE