கோவை:கல்லுாரி படிப்புகளில் ஆறு பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டங்களை யு.ஜி.சி., அறிமுகப்படுத்தியுள்ளது.கல்லுாரி பாடங்களில் உள்ள அம்சங்களை செயல்படுத்தும் வகையில், கற்றல் வெளிப்பாடு திட்டத்தில் புதிய பாடத்திட்டங்களை, பல்கலை மானிய குழு உருவாக்கி உள்ளது. இந்த வகையில், இயற்பியல், கணிதம், ஆங்கிலம், மானுடவியல், உளவியல், நுாலக அறிவியல், தாவரவியல், புள்ளியியல், ஊடகவியல் உள்ளிட்ட, 19 பாடங்களுக்கு ஏற்கனவே புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சட்டம், தொல்லியல், சமஸ்கிருதம், பாதுகாப்பு படிப்பு, வேதியியல் மற்றும் விலங்கியல் ஆகிய படிப்புகளுக்கு, புதிய பாடத்திட்டத்தை யு.ஜி.சி., அறிமுகம் செய்துள்ளது. நடப்பாண்டு மாணவர்களுக்கு, இந்த புதிய பாடத்திட்டம், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு வழங்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE