கோவை:கோவை, காந்தி மாநகரை சேர்ந்த சாந்தகுமார், அவரது மனைவி மாநகர போலீஸ் கமிஷனரிடம் நேற்று அளித்த புகார் மனு:எனது மனைவி முருகேஸ்வரி கழுத்தில், 10 சவரன் தங்க நகை அணிந்திருந்தார். அந்த நகை பிடித்து இருப்பதாகவும், அதே மாடலில் நகை செய்ய இருப்பதால், போட்டோ எடுத்து விட்டு தருகிறேன் என்றும், உறவுப்பெண் வாங்கி சென்றார். நகையை திருப்பி கொடுத்த போது, கவனிக்காமல் வாங்கி அணிந்து கொண்டார்.இரண்டு நாள் கழித்து பார்த்த போது, அதே போல மாடல் கொண்ட கவரிங் நகையை கொடுத்து ஏமாற்றியது தெரிய வந்தது. சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தும், வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கவில்லை. நகையை மீட்டுத்தர, போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, புகாரில் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE