கோவை:கோவையில் ஜன., 2ம் தேதி முதல், 10ம் தேதி வரை, 13வது கோயம்புத்துார் விழா கொண்டப்படுகிறது.இதுகுறித்து, '13வது கோயம்புத்துார் விழா'தலைவர் ஜெயபிரசாந்த் ஜெயச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:கொரோனாவில் இருந்து மீண்டு வரும் கோவை மக்களை, உற்சாகப்படுத்தும் விதமாக புத்தாண்டில் கோயம்புத்துார் விழா துவங்குகிறது.நடக்க உள்ள, 100 நிகழ்வுகளில், 75 சதவீதம் நிகழ்ச்சிகள் ஆன்லைன் வாயிலாக, மெய்நிகர் நிகழ்ச்சியாக நடக்க உள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இந்த விழாவை, பார்த்து ரசிக்க முடியும்.இந்த விழாவின் முதல் நிகழ்ச்சி ஆகாயத்தில் இருந்து துவங்க உள்ளது. கோவிட் முன்னணி பணி வீரர்களுக்கு, நன்றி செலுத்தும் விதமாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மீது, ஹெலிகாப்டரில் இருந்து மலர் துாவும் நிகழ்வு நடக்க உள்ளது. மராத்தன், சைக்கிளேத்தான், உணவுத்திருவிழா, சமையல் போட்டிகள், உள்ளூர் கலைஞர்கள் பங்கேற்கும் மெய்நிகர் கலைநிகழ்ச்சிகள், புதிதாக தொழில் துவங்குவோர்க்கான 'ஸ்டார்ட் அப்ஸ்' மேடை நிகழ்வு, ஏழை குழந்தைகளுக்கு 'லேப்டாப்' மற்றும் 'மொபைல் போன்' வழங்குதல் உள்ளிட்ட, 100 நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE