கோவை: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசின் இலவச வீடுகள் ஒதுக்க மனு அளிக்கப்பட்டுள்ளது.தேசிய பார்வையற்றோர் இணைய ஒருங்கிணைப்பாளர் சதாசிவம், கலெக்டர் ராஜாமணியிடம் அளித்த மனுவில், 'எங்கள் இணையத்தை சேர்ந்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பல்வேறு வியாபாரம் செய்து, அதில் கிடைக்கும் வருமானம் மூலம் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். அவர்களில் சிலர், போதிய வருமானம் இல்லாததால், வாடகை தரமுடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, அவர்களில் தகுதியானவர்களுக்கு, அரசு வழங்கும் இலவச வீடுகள் ஒதுக்கி உதவ வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.அதிகாலையில் காட்டு யானைபேரூர்: கிராமத்துக்குள் அதிகாலையில் புகுந்த ஒற்றை காட்டு யானை, வனத்துக்குள் விரட்டப்பட்டது.கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில், சில மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவற்றை கண்காணிக்க வனத்துறை சார்பில், தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, இக்கரை போளுவாம்பட்டி கிராமத்துக்குள் புகுந்தது. பின் தொடர்ந்து வந்த போளுவாம்பட்டி வனத்துறை ஊழியர்கள், காட்டு யானையை அடர்வனத்துக்குள் விரட்டினர்.கலெக்டர் அலுவலகம் முற்றுகைகோவை: பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கனில் விதிமீறல் நடப்பதாகக்கூறி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை, தி.மு.க.,வினர் முற்றுகையிட்டனர்.பின், 200க்கும் மேற்பட்டோர், மளமளவென கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். சற்றும் எதிர்பாராத போலீசார், அவர்களை கட்டுப்படுத்த முயன்றபோது, லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போக செய்தனர்.பைக் மோதி முதியவர் பலிவடவள்ளி: வடவள்ளி மருதம் நகரைச் சேர்ந்தவர் நரசிம்மன், 76. இவர், வீட்டிலிருந்து மருந்து வாங்க, மருதமலை ரோட்டிலுள்ள மெடிக்கல் ஷாப்புக்கு, ஸ்கூட்டரில் சென்றுள்ளார். மருதமலை மெயின் ரோடு சந்திப்பு அருகே, எதிரே அதிவேகத்தில் வந்த பைக், நரசிம்மன் மீது மோதியது. படுகாயமடைந்த நரசிம்மனை அருகிலிருந்தவர்கள், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.முககவசம் அணிய விழிப்புணர்வுகோவை: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, முககவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து, டிரினிட்டி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் நேற்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ராமநாதபுரம் சுற்றியுள்ள இடங்களில், இப்பள்ளியை சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட, பிளஸ் 2 மாணவர்கள், முககவசம் அணியுமாறு, பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். பள்ளி திறக்காததால், மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் எந்தியபடி, பொதுமக்களுக்கு மாஸ்க் விநியோகித்தனர்.பைக் மோதி தொழிலாளி பலிமதுக்கரை: மதுக்கரையை அடுத்த வேலந்தாவளம் அருகேயுள்ள, செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தவர், மேற்கு வங்காளத்தை சேர்ந்த ராஜேஸ் தாஸ், 38. நேற்று முன்தினம் இரவு, வேலந்தாவளம் - ஒத்தக்கால் மண்டபம் ரோட்டில், கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். பின்னால் வந்த பைக் மோதியதில் படுகாயமடைந்தார்.கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். க.க.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து, பைக்கை ஒட்டி வந்த சட்டக்கல்புதூரை சேர்ந்த, வெள்ளிங்கிரியிடம் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE