கோவை:கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில், கவுண்டம்பாளையத்தில் பாலம் கட்டும் பணி நடப்பதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண, வரும், 2 முதல், போக்குவரத்து மாற்றப்படுகிறது.கோவை- - மேட்டுப்பாளையம் ரோட்டில், கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் முதல் ராமன கவுண்டர் பூவாத்தாள் திருமண மண்டபம் வரை, 1 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டப்படுகிறது.இவ்வழித்தடத்தில் இரு சக்கர வாகனங்கள், கார், பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் அதிகமாக செல்வதால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதன் காரணமாக, வரும், ஜன., 2 முதல், போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை தவிர, மற்ற வாகனங்கள், மாற்று வழித்தடத்தில் செல்ல, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.இதன்படி, மேட்டுப்பாளையம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள், சாயிபாபா கோவில் - தடாகம் ரோடு - வேலாண்டிபாளையம் - கே.என்.ஜி.புதுார் - கணுவாய் - அப்பநாயக்கன்பாளையம் - துடியலுார் அல்லது கே.என்.ஜி.புதுார் - ஜி.என்., மில்ஸ் ஆகிய வழித்தடங்களில் செல்லலாம்.மேட்டுப்பாளையத்தில் இருந்து, கோவை நோக்கி வரும் வாகனங்கள், வெள்ளக்கிணறு - உருமாண்டம்பாளையம், உடையம்பாளையம், மணியக்காரம்பாளையம் - கணபதி - காந்திபுரம் அல்லது மணியகாரன்பாளையம் - சங்கனுார் - எருக் கம்பெனி - காந்திபுரம் ஆகிய வழித்தடங்களில் செல்லலாம். இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள், வழக்கம்போல் மேட்டுப்பாளையம் ரோட்டில் செல்லலாம் என, போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE