சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் பெண் பலி: போலீசார் விசாரணை

Added : டிச 29, 2020
Share
Advertisement
கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.அவிநாசி அடுத்த சேவூர், முறியாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர், விவசாயி மூர்த்தி, 48. மனைவி மகேஸ்வரி, 41. நேற்று முன்தினம் இருவரும், ஐந்து வயது குழந்தையுடன், இருசக்கர வாகனத்தில், கணியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, இரவு ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.அவிநாசி

கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.அவிநாசி அடுத்த சேவூர், முறியாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர், விவசாயி மூர்த்தி, 48. மனைவி மகேஸ்வரி, 41. நேற்று முன்தினம் இருவரும், ஐந்து வயது குழந்தையுடன், இருசக்கர வாகனத்தில், கணியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, இரவு ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.அவிநாசி சாலையில், கருமத்தம்பட்டி அடுத்துள்ள அரசு போக்குவரத்துக் கழக டிப்போ அருகே, பின்னால் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், மகேஸ்வரி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.காயமடைந்த மூர்த்தியும், குழந்தையும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X