பல்லடம்:போக்குவரத்து நெரிசலை குறைக்க, மேம்பாலம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பல்லடம் வட்டார சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் சார்பில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். சமூக ஆர்வலர்கள் பலர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கூட்டத்தின் முடிவில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொது தகவல் அலுவலர் பற்றிய விவரங்கள் அடங்கிய பெயர் பலகைகள் வைக்க வேண்டும்.பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்க வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.பி.ஏ.பி., திட்டத்தை கே. கிருஷ்ணாபுரம், புளியம்பட்டி, அனுப்பட்டி, கரடிவாவி, பருவாய், காரணம்பேட்டை மற்றும் அய்யம்பாளையம் பகுதிக்கு விரிவுபடுத்த வேண்டும்.பார்லிமென்டில், தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கிராம நீதிமன்றங்களை தமிழகம் முழுவதும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE