பொது செய்தி

தமிழ்நாடு

'புரெவி' புயல் சேதங்கள் மத்திய குழு ஆய்வு தீவிரம்

Added : டிச 30, 2020
Share
Advertisement
தமிழகத்தில், 'புரெவி' புயல் சேதங்களை ஆய்வு செய்யும் பணிகளை மத்திய குழுவினர், இன்று நிறைவு செய்கின்றனர்.தமிழகத்தில், 'நிவர்' புயலால், 40 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வேளாண்மை, தோட்டக் கலை பயிர்கள் சேதம் அடைந்தன. சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து முடித்து விட்டனர்.இதையடுத்து உருவான, 'புரெவி' புயல் காரணமாக, 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டியது.
 'புரெவி' புயல் சேதங்கள் மத்திய குழு ஆய்வு தீவிரம்

தமிழகத்தில், 'புரெவி' புயல் சேதங்களை ஆய்வு செய்யும் பணிகளை மத்திய குழுவினர், இன்று நிறைவு செய்கின்றனர்.

தமிழகத்தில், 'நிவர்' புயலால், 40 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வேளாண்மை, தோட்டக் கலை பயிர்கள் சேதம் அடைந்தன. சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து முடித்து விட்டனர்.இதையடுத்து உருவான, 'புரெவி' புயல் காரணமாக, 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டியது.

மாநிலம் முழுதும், 7 லட்சம் ஏக்கரில், வேளாண் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.மீனவர்களின் படகுகள் உள்ளிட்டவையும், சில மாவட்டங்களில் சேதம் அடைந்தன. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய குழுவினர், நேற்று முன்தினம் மதுரைக்கு விமானத்தில் வந்தனர்.

மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலர் அசுதோஸ் அக்னிஹோத்ரி மற்றும் மத்திய வேளாண்மை துறை அமைச்சக இயக்குனர் மனோகரன் தலைமையில், குழுவில் எட்டு பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், ராமேஸ்வரம் சென்று, இரவு தங்கினர்.நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று, சேதமடைந்த படகுகளை பார்வையிட்டனர்.

அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டம் வந்தவர்கள், கத்தக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்தனர்.மாவட்ட வேளாண்மை துறை சார்பில் அரங்கு அமைத்து, புயல் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதை, மத்திய குழுவினர் பார்வையிட்டனர். மேலும், சேதமடைந்த பயிர்கள் பற்றிய விபரங்களை, விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

தொடர்ந்து, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு சென்று, ஆய்வு மேற்கொண்டனர். கடலுார் மாவட்டத்தில், சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் பயிர் சேதங்களை பார்வையிட்டனர்.நாகையில் இரவு ஓய்வு எடுத்துவிட்டு, கீழையூர், கீழ்வேளூர் உள்ளிட்ட இடங்களுக்கு, இன்று சென்று பயிர் சேதங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.

மேலும், திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைபூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஆகிய இடங்களிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.இறுதிக்கட்ட ஆய்வை முடித்து, தஞ்சாவூரில் இருந்து திருச்சி சென்று, இரவு, 7:30 விமானத்தில் டில்லி செல்கின்றனர். இந்த குழுவினர் தரும் அறிக்கையை அடிப்படையாக வைத்து, தமிழகத்திற்கு புயல் சேத இழப்பீட்டை மத்திய அரசு வழங்கவுள்ளது.
- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X