அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வினரிடம் டோக்கன் :அரசியல் கட்சியினர் எதிர்ப்பு

Added : டிச 30, 2020
Share
Advertisement
திருப்பூர்:பொங்கல் பரிசுத் தொகை 'டோக்கன்' அரசு ஊழியர்கள் வாயிலாக மட்டுமே வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் கலெக்டரிடம், அனைத்து அரசியல் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், அவர்கள் கூறியிருப்பதாவது:பொங்கலுக்கு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பரிசுத் தொகையாக, 2,500 ரூபாய் வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. இதற்காக,
 அ.தி.மு.க.,வினரிடம் டோக்கன் :அரசியல் கட்சியினர் எதிர்ப்பு

திருப்பூர்:பொங்கல் பரிசுத் தொகை 'டோக்கன்' அரசு ஊழியர்கள் வாயிலாக மட்டுமே வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் கலெக்டரிடம், அனைத்து அரசியல் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், அவர்கள் கூறியிருப்பதாவது:பொங்கலுக்கு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பரிசுத் தொகையாக, 2,500 ரூபாய் வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களுடன், அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள், வீடு வீடாக சென்றும், ரேஷன் கடைகளிலும் டோக்கன் வழங்கி வருகின்றனர்.சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், அ.தி.மு.க.,வினர் அரசியல் ஆதாயம் தேடி வருகின்றனர்.மக்கள் செலுத்தும் வரிப்பணத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் இருந்து, மக்களுக்கு நலத்திட்ட நிதி அளிக்கிறது. அ.தி.மு.க., வினர், சட்ட விதி மீறிலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பொங்கல் பரிசு தொகைக்கு டோக்கனை, அரசு ஊழியர்களை வாயிலாகவே அளிக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, அதில் அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X