சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'2 மாத சம்பளம் வழங்கவில்லை'; துாய்மை பணியாளர் 'ஸ்டிரைக்'

Added : டிச 30, 2020
Share
Advertisement
திருப்பூர்:இரண்டு மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து, மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியா ளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள, 60 வார்டில், 30ல் ஒப்பந்த அடிப்படையில், 600க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.இவர்களில் பெரும்பாலாேனார், தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் தாராபுரம் ரோடு,
 '2 மாத சம்பளம் வழங்கவில்லை'; துாய்மை பணியாளர் 'ஸ்டிரைக்'

திருப்பூர்:இரண்டு மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து, மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியா ளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள, 60 வார்டில், 30ல் ஒப்பந்த அடிப்படையில், 600க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.இவர்களில் பெரும்பாலாேனார், தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் தாராபுரம் ரோடு, கோவில்வழி பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.கடந்த, இரு மாதமாக துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து, ஒப்பந்த நிறுவனத்திடம் கேட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால், துாய்மை பணியாளர்கள் நேற்று நிலுவையில் உள்ள சம்பள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்றொரு தரப்பினர், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.தகவலறிந்து சென்ற தெற்கு போலீசார் பேச்சு நடத்தினர். அதில், இரு நாட்களில் நிலுவையில் உள்ள சம்பளம் வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதனால், அனைவரும் கலைந்து சென்றனர்.துாய்மை பணியாளர்கள் கூறியதாவது:இந்த பிரச்னை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. சம்பளம் முறையாக பட்டுவாடா செய்யப்படுவதில்லை. குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். பொருளாதார ரீதியாக பிரச்னையில் சிக்குவதோடு, அன்றாடம் சாப்பிட கூட முடிவதில்லை.எங்களை நம்பி உள்ள குடும்பத்தினர் கஷ்டப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்குவதோடு, இப்பிரச்னை மீண்டும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X