திருப்பூர்:இழந்த வருவாயை மீட்டெடுப்பதன் ஒரு பகுதியாக, தொலை துார, சுற்றுலா தலங்களுக்கான பஸ் இயக்கத்தை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அரசு விரைவு போக்குவரத்து கழகம் (எஸ்.இ.டி.சி.,) அனைத்து மாவட்ட தலைநகரங்களையும் சென்னையுடன் இணைக்க, வரலாற்று சிறப்பு வாய்ந்த இடம், சமய வழிபாட்டு தலங்களுக்கு சென்று வர ஏ.சி., மற்றும் சொகுசு பஸ்களை இயக்குகிறது.கொரோனாவால், இந்த பஸ்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. போக்குவரத்து கழக(டி.என்.எஸ்.டி.சி.,) பஸ் இயக்கம் துவங்கியும் இந்த பஸ்கள் இயங்க முழுமையாக அனுமதி வழங்கப்படவில்லை.தற்போது, கேரள மாநிலம் தவிர அருகில் உள்ள மாநிலங்களுக்கு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இச்சூழலில் இழந்த வருவாயை மீட்கவும், பயணிகளுக்கு தேவையான முழு பஸ் இயக்கத்தை உறுதிசெய்யவும், கூடுதல் பஸ்களை இயக்க எஸ்.இ.டி.சி., முடிவு செய்துள்ளது.போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில் போக்கு வரத்து துறை செயலர் தலைமையில் ஆலோசனை கூட்டத்தில் பஸ்களை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு, பார்வையாளர் வருகை துவங்கியுள்ளது.புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நெருங்குவதால், பஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மாவட்டத்துக்கு இரண்டு பஸ் வீதம், 40க்கும் அதிகமான பஸ் இயக்கப்பட வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE