பொது செய்தி

தமிழ்நாடு

சாயமிடும் கட்டணம், 15 சதவீதம் உயர்வு: சாய ஆலை உரிமையாளர் சங்கத்தினர் முடிவு

Added : டிச 30, 2020
Share
Advertisement
திருப்பூர்:'வரும், ஜன., ஒன்றாம் தேதி முதல், தற்போதைய சாயமிடுதல் கட்டணத்தில் இருந்து, கிலோ ஒன்றுக்கு 15 சதவீதம் உயர்த்த' சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றபப்பட்டுள்ளது.திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின், 29வது பொதுக்குழு கூட்டம், வாலிபாளையம் சேம்பர் அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு, அதன் தலைவர் நாகராஜன், தலைமை வகித்தார். பொதுச்செயலாளர்

திருப்பூர்:'வரும், ஜன., ஒன்றாம் தேதி முதல், தற்போதைய சாயமிடுதல் கட்டணத்தில் இருந்து, கிலோ ஒன்றுக்கு 15 சதவீதம் உயர்த்த' சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றபப்பட்டுள்ளது.திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின், 29வது பொதுக்குழு கூட்டம், வாலிபாளையம் சேம்பர் அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு, அதன் தலைவர் நாகராஜன், தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முருகசாமி, முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், மூலப் பொருட்களின் தட்டுப்பாடு, விலையேற்றம், டீசல் விலை உயர்வு, சாயக் கழிவு நீர் சுத்திகரிப்பு செலவினங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஜன., ஒன்றாம் தேதி முதல், தற்போதைய சாயமிடுதல் கட்டணத்தில் இருந்து, கிலோ ஒன்றுக்கு 15 சதவீதம் உயர்த்தப்படும்.மத்திய - மற்றும் மாநில அரசுகள், பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்கிய வட்டி இல்லா கடனை மானியமாக மாற்ற உத்தரவிட வேண்டும்.பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு, 50 சதவீதம் மற்றும் தனியார் சுத்திகரிப்பு மானிய விலையில், மின்சார வினியோகம் செய்ய வேண்டும். சாய ஆலைகளுக்கு, மாசுக்கட்டுப்பாடு வாரியம் மூலம் வழங்கப்படும் ஒப்புதலை, 5 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் முறையை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் செயல்படுத்த வேண்டும்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், சைமா, டீமா ஆகிய சங்கங்களில் உறுப்பினர்கள், சாய ஆலைகளின் பில் தொகையை அதிகபட்சம், 30 நாட்களுக்குள் அளிக்க வேண்டுமென, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X