பல்லடம்:பல்லடம் தாலுகாவில், 1,978 கார்டுதாரர்கள், அரிசி வகை கார்டுக்கு மாறியுள்ளனர்.பல்லடம் தாலுகாவில், 135 பகுதி நேர, மற்றும் முழு நேர ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 74,291 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பாக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2,500 ரூபாய் மற்றும் கரும்பு, வெல்லம், அரிசி உள்ளிட்ட பொங்கல் பொருட்களையும் அறிவித்துள்ளது.அரிசி கார்டுதாரர்களுக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கும் என்பதால், சர்க்கரை கார்டுதாரர்கள் அரிசி கார்டாக மாற்றவும் அவகாசம் வழங்கப்பட்டது. அவ்வகையில், பல்லடம் தாலுகாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சர்க்கரைக்கு பதில் அரிசி கார்டாக மாற்றியுள்ளனர்.பல்லடம் வட்ட வழங்கல் அலுவலர் ரேவதி கூறுகையில், ''பல்லடம் தாலுகாவில் உள்ள, 73,430 அரிசி கார்டுகள், 861 சர்க்கரை காடுகள் என, மொத்தம், 74,291 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில், 1,978 பேர் இம்மாதம் சர்க்கரை காட்டில் இருந்து அரிசி கார்டுக்கு மாற்றம் செய்துள்ளனர். மேலும், சில பரிசீலனையில் உள்ளன,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE