பொது செய்தி

தமிழ்நாடு

உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா

Added : டிச 30, 2020
Share
Advertisement
உத்தரகோசமங்கை:உத்தரகோசமங்கை கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டு, அபிஷேகம் நடந்தது.ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன், மங்களநாத சுவாமி கோவிலில், டிச., 21ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. ஆருத்ரா தரிசனத்திற்காக, மரகத நடராஜரின் திருமேனியில் பூசப்பட்ட சந்தனம், நேற்று காலை, 8:00 மணிக்கு களையப்பட்டது.இதர

உத்தரகோசமங்கை:உத்தரகோசமங்கை கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டு, அபிஷேகம் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன், மங்களநாத சுவாமி கோவிலில், டிச., 21ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. ஆருத்ரா தரிசனத்திற்காக, மரகத நடராஜரின் திருமேனியில் பூசப்பட்ட சந்தனம், நேற்று காலை, 8:00 மணிக்கு களையப்பட்டது.

இதர நாட்களில் மரகத, ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை நடக்கும். காலை, 10:30 முதல் சந்தனம் களையப்பட்ட மூலவர் மரகத நடராஜர், சிவகாமி அம்மனுக்கு, 31 வகையான அபிஷேகங்கள் நடந்தன. பின், சந்தனாதித் தைலம் பூசப்பட்டது. கரும்பச்சை நிறத்தில், மூலவர் காணப்பட்டார். இந்த அபூர்வ தரிசனத்தை, பக்தர்கள் நள்ளிரவு வரை காத்திருந்து தரிசனம் செய்தனர். இரவு, 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடந்தது.

இன்று அதிகாலை, 5:00 மணியளவில், கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளலும், அருணோதய நேரத்தில், சுவாமியின் திருமேனியில் புதிய சந்தனம் பூசப்பட்டு, சர்வ அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு மாணிக்கவாசக சுவாமிக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். கொரோனா கட்டுப்பாடுகளால் வெளி மாவட்ட பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், குறைந்த அளவே பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X