‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

Updated : டிச 30, 2020 | Added : டிச 30, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசியான. மாடர்னா மருந்தின் முதல் டோசை போட்டுக்கொண்டார்.சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதையும் கதிகலங்க வைத்துள்ளது. அமெரிக்காவில் மட்டும், இதுவரை 1.98 கோடி பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். 3.43 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே, கொரோனா தடுப்புக்கான மாடர்னா மருந்து
Kamala Harris, Receives, Coronavirus Vaccine

வாஷிங்டன்: அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசியான. மாடர்னா மருந்தின் முதல் டோசை போட்டுக்கொண்டார்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதையும் கதிகலங்க வைத்துள்ளது. அமெரிக்காவில் மட்டும், இதுவரை 1.98 கோடி பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். 3.43 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே, கொரோனா தடுப்புக்கான மாடர்னா மருந்து கண்டுபிடிப்பு, அமெரிக்க மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், கடந்த 21ம் தேதி, மாடர்னா மருந்தின் முதல் டோசை போட்டுக்கொண்டார். இந்நிலையில், துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ், வாஷிங்டனில் உள்ள யுனிடெட் மெடிக்கல் சென்டரில், மாடர்னா மருந்தின் முதல் டோசை போட்டுக் கொண்டார். கமலாவின் கணவரும் மாடர்னா மருந்தை போட்டுக்கொண்டார். இந்நிகழ்வு டிவியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.


latest tamil news



நேரலையில் பேசிய கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது எளிதானது என்றும், 2வது டோசை எடுத்துக் கொள்ள ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்தார். உயிர்களை காக்கும் இம்மருந்தை அனைவரும் எடுத்துக்கொள்ளும்படியும் அவர் மக்களை கேட்டுக் கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
30-டிச-202007:46:14 IST Report Abuse
Allah Daniel கமலா ஹாரிஸ் இந்தியாவின் எதிரி...ஏன், சொல்லப்போனால் அவர் அமெரிக்காவின் எதிரியும் கூடத்தான்...நம்ம ஊரு பிரியங்காவை விட மோசமானவர்...’வில்லி பிரவுன்’ என்பவர் மூலம் எப்படி அரசியலுக்கு வந்தார் என்று தேடி படிக்கவும்...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-டிச-202004:11:22 IST Report Abuse
J.V. Iyer ரொம்ப ‛மாடர்னா' இருக்கிறாரே கமலா ஹாரிஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X