பொது செய்தி

தமிழ்நாடு

உரம் தயாரிப்பில் தோட்டக்கலை: துறை விவசாயிகளுக்கு வழங்க முடிவு

Added : டிச 30, 2020
Share
Advertisement
கூடலுார்:கூடலுாரில், இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில், தோட்டக்கலை துறை சார்பில், மண்புழு உரம் தயாரித்து 'சப்ளை' செய்யப்பட்டு வருகிறது.கூடலுார் பகுதி விவாயிகளை, இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவது குறித்து, தோட்டக்கலை துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.விவசாயிகளுக்கு தேவையான பஞ்சகவ்யா, தசகவ்யா கரைசல்களை தோட்டக்கலை துறையினர் தயாரித்து,

கூடலுார்:கூடலுாரில், இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில், தோட்டக்கலை துறை சார்பில், மண்புழு உரம் தயாரித்து 'சப்ளை' செய்யப்பட்டு வருகிறது.கூடலுார் பகுதி விவாயிகளை, இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவது குறித்து, தோட்டக்கலை துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.விவசாயிகளுக்கு தேவையான பஞ்சகவ்யா, தசகவ்யா கரைசல்களை தோட்டக்கலை துறையினர் தயாரித்து, குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.இதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டு இயற்கை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, நாடுகாணி, பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில், தோட்டக்கலை துறை சார்பில் மண்புழு உரம் தயாரிக்கும் பணிகளை துவங்கியுள்ளனர்.தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில்,'இப்பகுதி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில், ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு தேவையான, இயற்கை பூச்சி கொல்லியான தசகவ்யா, பஞ்சகவ்யா கரைசல்கள் உற்பத்தி செய்து, குறைந்த விலையில் வழங்கி வருகிறோம். தொடர்ந்து, மண்புழு உரம் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X