'மஞ்சள் மொசைக் வைரஸ்' நோய்: பாகற்காய் செடிகள் பாதிப்பு

Added : டிச 30, 2020
Share
Advertisement
கூடலுார்:கூடலுாரில் பாகற்காய் செடிகளை தாக்கும் 'வைரஸ்' நோயால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கூடலுார் பகுதி விவசாயிகள் நடப்பு ஆண்டு, 100 ஏக்கர் பரப்பளவில் பாகற்காய் விவசாயத்தை துவங்கியுள்ளனர். இந்நிலையில், ஒருவித 'வைரஸ்' நோய் தாக்குதலால், பாகற்காய் செடிகள் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.நோய் பாதித்த செடிகளை ,ஊட்டி தோட்டக்கலை
 'மஞ்சள் மொசைக் வைரஸ்' நோய்: பாகற்காய் செடிகள் பாதிப்பு

கூடலுார்:கூடலுாரில் பாகற்காய் செடிகளை தாக்கும் 'வைரஸ்' நோயால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கூடலுார் பகுதி விவசாயிகள் நடப்பு ஆண்டு, 100 ஏக்கர் பரப்பளவில் பாகற்காய் விவசாயத்தை துவங்கியுள்ளனர். இந்நிலையில், ஒருவித 'வைரஸ்' நோய் தாக்குதலால், பாகற்காய் செடிகள் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.நோய் பாதித்த செடிகளை ,ஊட்டி தோட்டக்கலை துறை ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் ராஜா; கூடலுார் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி, உழவர் உற்பத்தியாளர் உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.ஆய்வில், பாகற்காய் செடிகளில்,'மஞ்சள் மொசைக் வைரஸ்' நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி கூறுகையில்,''வயல்களில், நுண்ணுயிர் சத்துக்களை சரிவிகித அளவில் பயிருக்கு வழங்கிட வேண்டும்; நோய் தாக்கிய செடியை அடியோடு அகற்ற வேண்டும்; நோய் பரவ காரணமான, வெள்ளை பூச்சிகளை கட்டுப்படுத்த தசகவ்யா, கற்பூர கரைசல் பயன்படுத்த வேண்டும்; தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ள, இந்நோய் எதிர்ப்புத்திறன் உள்ள, 'கோ--2, எம்டியு--1' ரகங்களை பயிரிட வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X