கூடலுார்:கூடலுாரில், 4.75 கோடி ரூபாய் மதிப்பில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி, பூமி பூஜையுடன் துவங்கியது.கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்டில் தொடரும் இடபிரச்னைக்கு தீர்வாக, பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக, சில ஆண்களுக்கு முன், கூடலுார் எம்.எல்.ஏ., தொகுதி நிதி, 50 லட்சம் ரூபாய், எச்.ஏ.டி.பி.,நிதி, 23 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு அங்கு தடுப்புச் சுவர் அமைக்கபட்டது. அதற்கு மேல் பணிகளை தொடர நிதி இல்லாததால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில், ஊட்டியில், கடந்த ஆண்டு நடந்த எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில், தமிழக முதல்வர் அறிவித்தபடி, 26 கடைகளுடன் கூடிய வணிக வளாகத்துடன், கூடலுாரில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க, அரசு சார்பில், 4.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.இதற்கான பூமி பூஜை, கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்டில் நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், அ.தி.மு.க., வர்த்தக அணி மாநில தலைவா சஜீவன், முன்னாள் அமைச்சர் மில்லர், நகர செயலாளர் அனுப்கான், பங்கேற்று பூமி செய்து, பணிகளை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை கிளை மேலாளர் ராஜ்குமார், நகராட்சி கமிஷனர் பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE