பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், போலீஸ் நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.பொள்ளாச்சியில், கடந்த, 1985ம் ஆண்டு பணியில் சேர்ந்து, 36 ஆண்டுகளாக போலீஸ் துறையில் பணியாற்றுவோர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தனர்.அதன்படி, பொள்ளாச்சியில் போலீசார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கோவை, திருப்பூர், பெரம்பலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றும், 50 போலீசார் பங்கேற்றனர்.போலீசார், ஒவ்வொரும் தங்களது குடும்பம், வேலைப்பளு என அனைத்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பொதுமக்களிடம் நடந்து கொண்ட விதம் குறித்து விவாதித்ததுடன், வறுமையில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என, தீர்மானித்தனர். போலீசார் கூறுகையில், 'போலீஸ் மனச்சுமைகளை குறைக்க சந்திப்பு நிகழ்வு நடந்தது. இதுபோன்று நிகழ்வுகள் ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என முடிவெடுத்துள்ளோம்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE