பொள்ளாச்சி:பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டில், கைக்குழுந்தைகளுடன் வரும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு பாலுாட்ட அரசு சார்பில் அமைக்கப்பட்ட அறை, பல மாதங்களாக பூட்டிக்கிடக்கிறது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், கைக்குழந்தைகளுடன் பஸ் பயணம் மேற்கொள்ளும் தாய்மார்கள், குழந்தைகளின் பசி தணிக்க, மற்றவரின் பார்வையில் இருந்து மறைவாக அமர்ந்து பாலுாட்டும் வகையில், பஸ் ஸ்டாண்டுகளில் தாய்மார்கள் பாலுாட்டும் அறைகளை அமைத்தார்.பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்ட இந்த அறை, கடந்த, 2015ல் காணொலி காட்சியில் திறக்கப்பட்டது. சில மாதங்கள் சிறப்பாக செயல்பட்ட இந்த அறை, பல்வேறு காரணங்களை கூறி அவ்வப்போது பூட்டப்பட்டது.இது குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியிடும் போது, சில நாட்கள் கண்துடைப்பாக திறந்து வைப்பதும், மீண்டும் பூட்டுவதுமாக பஸ் ஸ்டாண்ட் நிர்வாகம் இருந்து வருகிறது.கடந்த மார்ச் மாதம், கொரோனா பரவலால் இந்த அறை பூட்டப்பட்டது. பஸ் போக்குவரத்து துவக்கப்பட்ட பிறகும் தற்போது திறக்கப்படவில்லை.இதனால், கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், பொதுவெளியில் தர்மசங்கடத்துடன் பாலுாட்ட வேண்டிய நிலையில் உள்ளனர்.முன்னாள் முதல்வர் ஜெ., துவக்கி வைத்த திட்டத்தை, அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். இதனால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE