பொது செய்தி

தமிழ்நாடு

மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க தயக்கம்: திட்டத்தில் மாற்றத்துக்கு பயனாளிகள் காத்திருப்பு

Added : டிச 30, 2020
Share
Advertisement
உடுமலை:மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்துக்கான தொகையை அதிகரித்தால், உண்மையான பயனாளிகள், திட்டத்தில், பயன்பெற உதவியாக இருக்கும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.தமிழக அரசு சார்பில், பணிக்கு செல்லும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களுக்கு, உதவும் வகையில், மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தகுதியுள்ள பயனாளிகளுக்கு, 25 ஆயிரம் ரூபாய் மானியமாக

உடுமலை:மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்துக்கான தொகையை அதிகரித்தால், உண்மையான பயனாளிகள், திட்டத்தில், பயன்பெற உதவியாக இருக்கும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.தமிழக அரசு சார்பில், பணிக்கு செல்லும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களுக்கு, உதவும் வகையில், மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தகுதியுள்ள பயனாளிகளுக்கு, 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.ஆண்டுதோறும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, குறிப்பிட்ட இலக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, பயனாளிகளை தேர்வு செய்து, அந்தந்த மாவட்ட நிர்வாகத்துக்கு பட்டியல் அனுப்பப்படுகிறது.துவக்கத்தில் இத்திட்டத்தில் அதிக ஆர்வமாக விண்ணப்பித்த மக்கள், தற்போது, ஒன்றியங்களுக்கான இலக்கு குறைக்கப்பட்ட நிலையிலும், பயனாளிகளின் ஆர்வமும் குறைந்து வருகிறது. நடப்பு நிதியாண்டு துவங்கியும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, விதிக்கப்பட்ட ஊரடங்கினால், 2020-21 ம் ஆண்டுக்கு, மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.மீண்டும், இரண்டு மாதங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. குடிமங்கலம் ஒன்றியத்தில், 111 கடந்தாண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, 81 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிலும், 111 பேருக்கு திட்டத்தை செயல்படுத்த இலக்கு வழங்கப்பட்டுள்ளது.ஆனால், கடந்தாண்டை விடவும், நடப்பாண்டில் திட்டத்தில் விண்ணப்பிக்க மக்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். சுயதொழில் செய்வோரும் இத்திட்டத்தில் பயன்பெற அனுமதி மற்றும், திட்டத்தில் விண்ணப்பிக்கும்போது, ஓட்டுநர் உரிமம் சமர்ப்பிக்க தேவையில்லை என்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.இருப்பினும், கொரோனா பாதிப்பினால், பலரும் வேலைவாய்ப்பை இழந்தும், பொருளாதார சூழ்நிலையால் பாதிப்படைந்தும் உள்ளனர். மேலும், இரு சக்கர வாகனங்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, மக்களும் இத்திட்டத்தில் பயன்பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். திட்டத்தில் வழங்கப்படும் மானியத்தொகை அதிகரித்தால் மட்டுமே பயனாளிகள் முழுமையாக பயன்பெற முடியும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X