பொது செய்தி

தமிழ்நாடு

மரச்சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்: 20 ஏக்கரில் சவுக்கு நடவு

Added : டிச 30, 2020
Share
Advertisement
உடுமலை:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், உடுமலை பகுதிகளில், 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில் செயல்படுத்தப்படும், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், உடுமலை பகுதியில், நடப்பாண்டு, 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. காகிதம், மரப்பலகை உள்ளிட்ட பணிகளுக்காக, வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதை

உடுமலை:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், உடுமலை பகுதிகளில், 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில் செயல்படுத்தப்படும், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், உடுமலை பகுதியில், நடப்பாண்டு, 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. காகிதம், மரப்பலகை உள்ளிட்ட பணிகளுக்காக, வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கும் வகையிலும், குறைந்த நீர் வசதி உள்ள பகுதிகளில், தொடர்ந்து மரச்சாகுபடி மேற்கொள்ளும் வகையில், பசுமை பரப்பு அதிகரிப்பு மற்றும் விவசாயிகளுக்கு வருவாய் அளிக்கும் வகையில், மரக்கன்றுகள் நடப்படுகிறது.அதன் அடிப்படையில், லிங்கமநாயக்கனுாரில் உள்ள, அனிருத் என்ற விவசாயிக்கு சொந்தமான, 20 ஏக்கர் பரப்பளவில், 18,871 சவுக்கு மரக்கன்றுகள் மற்றும் 300 தைலமரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதன் மூலம், மரத்தேவை நிறைவு செய்யப்படுவதோடு, விவசாயிகளுக்கும் வருவாய் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அதே போல், நாட்டு மரங்களை பாதுகாக்கும் வகையில், இலுப்ப நகரம் பகுதியில், ஒரு ஏக்கர் பரப்பளவில், புங்கன், குமிழ், கடம்பை, நாவல், நாட்டு வேம்பு, ஆயன், தான்றிக்காய், நாட்டு பலா, சொர்க்கம், கருங்காலி, கொடுக்காப்புளி என, 490 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும்,வல்லக்குண்டாபுரம், வெங்கடேசுக்கு சொந்தமான விவசாய நிலத்தில், தேக்கு, கடம்பை என, 220 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X