கொப்பரை விலை திடீர் சரிவு: உற்பத்தியாளர்கள் அதிருப்தி

Added : டிச 30, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:கொப்பரை விலை திடீரென குறைத்துள்ளதால், விவசாயிகள், உற்பத்தியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.தமிழகத்தில், தென்னை சாகுபடி பரப்பு பொள்ளாச்சியில் அதிகமுள்ளது. தேங்காய் சீசன் நிறைவடைந்த நிலையில், கடந்த, ஒரு மாதமாக கொப்பரை விலை உயராமல் இருந்தது. அதிகபட்சமாக கொப்பரை விலை கிலோ, 132 ரூபாய் என, உயர்ந்தது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு அடுத்த நாளே, கொப்பரை, 125

பொள்ளாச்சி:கொப்பரை விலை திடீரென குறைத்துள்ளதால், விவசாயிகள், உற்பத்தியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.தமிழகத்தில், தென்னை சாகுபடி பரப்பு பொள்ளாச்சியில் அதிகமுள்ளது. தேங்காய் சீசன் நிறைவடைந்த நிலையில், கடந்த, ஒரு மாதமாக கொப்பரை விலை உயராமல் இருந்தது. அதிகபட்சமாக கொப்பரை விலை கிலோ, 132 ரூபாய் என, உயர்ந்தது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு அடுத்த நாளே, கொப்பரை, 125 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், உற்பத்தியாளர்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. இதனால், தென்னை விவசாயிகள், கொப்பரை உற்பத்தியாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்க மாநில பிரதிநிதி தங்கவேலு கூறுகையில், ''வரும் ஆண்டில், தேங்காய் சீசன் மார்ச் இறுதியில் துவங்கிவிடும். மார்ச் மாதம் உற்பத்தியாகும் தேங்காய், முயற்றிலும் விற்பனைக்கு சென்று விடும். கொப்பரை உற்பத்திக்கு கிடைக்காது.மார்கழி மாதத்தில், விழாக்கள் குறைவு என்பதால், தேங்காய்க்கும் செலவிருக்காது. எனவே, உற்பத்தியாளர்கள் இப்போதே கொப்பரையை விற்காமல், இருப்பு வைத்து, விலை உயரும் போது விற்று பலனடையலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X