முடிவுக்கு வந்த ரஜினி அரசியல்| Dinamalar

முடிவுக்கு வந்த ரஜினி அரசியல்

Updated : டிச 30, 2020 | Added : டிச 30, 2020 | கருத்துகள் (83) | |
வரும், 31ம் தேதி, கட்சி அறிவிப்பை நடிகர் ரஜினி வெளியிடப் போவதாக கூறிய நிலையில் திடீரென முடிவை மாற்றி கட்சி துவங்க போவதில்லை என அறிவித்தார். * 1995: முத்து படத்தில், 'நான் எப்ப வருவேன்; எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, வர வேண்டிய நேரத்தில் வருவேன்' என, பஞ்ச் டயலாக் பேசி, முதன்முதலாக தன் அரசியல் ஆசையை வெளிப்படுத்தினார் ரஜினி.* 2017 மே: சென்னையில், ரசிகர் மன்ற
 முடிவுக்,ரஜினி, அரசியல்

வரும், 31ம் தேதி, கட்சி அறிவிப்பை நடிகர் ரஜினி வெளியிடப் போவதாக கூறிய நிலையில் திடீரென முடிவை மாற்றி கட்சி துவங்க போவதில்லை என அறிவித்தார்.

* 1995: முத்து படத்தில், 'நான் எப்ப வருவேன்; எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, வர வேண்டிய நேரத்தில் வருவேன்' என, பஞ்ச் டயலாக் பேசி, முதன்முதலாக தன் அரசியல் ஆசையை வெளிப்படுத்தினார் ரஜினி.

* 2017 மே: சென்னையில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.

* டிச., 31: அரசியலுக்கு வருவது உறுதி. ஆன்மிக அரசியலை முன்னெடுப்போம். தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டி என அறிவிப்பு.

* 2019: லோக்சபா தேர்தலின் போது, 'சொன்னதை செய்வேன். எங்களின் இலக்கு சட்டசபை தேர்தல் தான்' என்றார்.

* 2020 மார்ச், 5: மாவட்ட செயலர்களுடன் நடத்திய கூட்டத்துக்கு பின் பேசிய இவர், 'என் முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன்' என்றார்.

* மார்ச், 12: 'கட்சிக்கு ஒரு தலைமை; ஆட்சிக்கு ஒரு தலைமை' என்ற முடிவில் இருப்பதாக தெரிவித்தார்.


latest tamil news





* அக்., 29: தன் உடல்நிலை குறித்து வெளியான தகவலுக்கு பதிலளித்த ரஜினி, அது, என்னுடைய அறிக்கை அல்ல; ஆனால், அதிலுள்ள தகவல் உண்மை என்றார்.

* நவ., 30: மாவட்ட செயலர்களுடன் ஆலோசனை.

* டிச., 3: ஜனவரியில் கட்சி துவங்குவதாகவும், டிச., 31ல் தேதி அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

* டிச., 29: உடல்நிலை காரணமாக கட்சி தொடங்க முடியாது என ரஜினி அறிவிப்பு.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X