கருமத்தம்பட்டி:உள்ளூர் வாகனங்களுக்கு டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கும் பிரச்னை குறித்து, முதல்வரிடம் நேரில் மனு அளிக்கப்பட்டது.தேசிய நெடுஞ்சாலையான அவிநாசி சாலையில், கணியூர் டோல்கேட்டில், வரும், 1ம் தேதி முதல் உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பாஸ் முறையை மாற்றக்கூடாது, உள்ளூர் வாசிகளின் வாகனங்களுக்கு தனி சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும்' என, இப்பகுதியை சேர்ந்த பல்வேறு தரப்பினர், டோல்கேட் நிர்வாகத்திடம் முறையிட்டனர்.பிரச்னை குறித்து, நேற்று முன்தினம், 10 கி.மீ., சுற்றளவில் உள்ள கிராம மக்கள் பங்கேற்ற கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. வருவாய்த்துறை, போலீஸ் மற்றும் டோல்கேட் அதிகாரிகள் பங்கேற்றனர்.தொடர்ந்து, எம்.எல்.ஏ., கந்தசாமி தலைமையில், கருமத்தம்பட்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் மகாலிங்கம், முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சி தலைவர் கந்தவேல் மற்றும் பிரமுகர்கள், நேற்று முன்தினம் கோவை வந்த முதல்வர் பழனிசாமியிடம், டோல்கேட் கட்டண விவகாரம் குறித்து மனு அளித்தனர். முதல்வர் மற்றும் உள்ளாட்ச்சித்துறை அமைச்சர் வேலுமணியிடமும் பிரச்னை குறித்து அக்குழுவினர் விளக்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE